சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'எஸ்-3' திரைப்படத்தை ஹரி இயக்கி வருகிறார். இந்நிலையில், அவருக்கு தற்போது ஒரு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இன்று அதிகாலை 2 மணியளவில் ஹரிக்கு, கார்த்தி, கருப்பசாமி ஆகிய இருவரும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து காலை 7 மணிக்கும், அவர்கள் இந்த வெடிகுண்டு மிரட்டலை கொடுத்துள்ளனர்.
இதனால் ஹரி, உடனே அருகிலுள்ள விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அவர்கள் இருவர் மீதும் புகார் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து போலீசார் இந்த வழக்கை விசாரித்ததில் ஹரிக்கும், கார்த்தி, கருப்பசாமிக்கும் இடப்பிரச்சனைகள் இருந்துள்ளது தெரிய வந்தது.
மேலும் அவர்கள் இருவரும், இயக்குனர் ஹரியின் பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.