கடைசி, கடைசியாக முடிஞ்சே போயிடுச்சு... ஆமாங்க யாகூ நிறுவனத்தை வெரைஸான் தொலைத்தொடர்பு நிறுவனம் வாங்குவதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இதற்காக 483 கோடி டாலர் விலை பேசப்பட்டுள்ளதாம். 


இணையத்தில் தேடுதல், செய்தி, வீடியோ போன்ற தேவைகளுக்கு முன்பெல்லாம் கூகுளை விட யாகூவைத்தான் அதிகமான மக்கள் பயன்படுத்தினர். அப்போது யாகூதான் ஜாம்பவான் என்பதை யாரும் மறுக்கக்கூட முடியாது.

ஆனால் காலம் மாற, மாற 2000-ம் ஆண்டுக்குப் பின்னர் யாகூவின் சரட்டென்று செல்வாக்கு சரிய தொடங்கியது. கூகுள், யூ-டியூப், பேஸ்புக் என்று புது வரவுகள் ஆக்கிரமிப்பால் யாகூவின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு யாகூ நிறுவனம் விற்பனைக்கு தயார் என்று சொல்லப்பட்டது. அப்புறம் என்ன போட்டா போட்டியாக பல நிறுவனங்கள் முயற்சிக்க இப்போது வெரைஸான் தொலைத்தொடர்பு நிறுவனம் முந்திக் கொண்டுவிட்டது. வெரைஸான் நிறுவனம் 483 கோடி டாலர் கொடுத்து யாகூவை வாங்குகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்த இணைப்பு முழுமையடையும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை அடுத்து, யாகூவின் சகாப்தம் அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: