பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ், தற்போது ஒரு புதிய பொறுப்பை ஏற்றுள்ளார். 


பெண்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான ஐ.நா அமைப்பின், இந்தியாவின் தூதராக ஐஸ்வர்யா தனுஷ்  நியமிக்கப்பட்டுள்ளார். 


இவரை, உலக நாடுகளின் பெண்கள் கூட்டமைப்பு நிர்வாக இயக்குனர் லட்சுமி பூரி தேர்ந்தெடுத்து உள்ளார். 


ஆண் பெண் இருபாலருக்கும் சமமான உலகை 2030-க்குள் உருவாக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு, இந்த அமைப்பு செயல்புரிந்து வருகிறது.இதில், இந்தியாவில் உள்ள பெண்களின் முன்னேற்றத்திற்காக ஐஸ்வர்யா தனுஷ் பாடுபட உள்ளார். 


Find out more: