நியூயார்க்:
அதிர்ச்சியிலும் அதிர்ச்சியாக சுற்றுலா வந்த வாலிபருக்கு ஏற்பட்ட சோகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது எங்கு தெரியுங்களா?


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பூங்காவில் பாறை மீது ஏற முயன்ற வாலிபரின் கால் குண்டுவெடிப்பில் துண்டான சம்பவம்தான் அது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவின் புளோரிடா நகரை சேர்ந்தவர் கன்னோர் கோல்டன் (18). கல்லூரி மாணவர். வாஷிங்டன் நகரில் உள்ள தனது நண்பர்களுடன் சேர்ந்து நியூயார்க் நகரை சுற்றிப்பார்க்க வந்தார்.


இன்று காலை சுமார் 11 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) நியூயார்க் நகரில் உள்ள சென்ட்ரல் பார்க் பூங்காவில் சுற்றி பார்த்தபடி இருந்தார்.
அப்போது அங்கிருந்த சிறிய பாறையின்மீது தன் நண்பருடன் ஏறி  இயற்கை காட்சிகளை ரசித்து பார்க்க நினைத்தார்.  பாறையில் ஏறிக் கொண்டிருக்கும் போது பெரிய விபரீதம் ஏற்பட்டது. திடீரென்று அந்த பாறைக்கு அடியில் இருந்த சிறியரக குண்டு வெடித்து சிதறியது.


இச்சம்பவத்தில் அவருடன் இருந்த ஒரு நண்பர் ஆறடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டார். கன்னோர் கோல்டனின் இடதுகால் முழங்காலுக்கு கீழே துண்டானது. உடன்  போலீஸ் மற்றும் அவசர சிகிச்சை வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்து சேர்ந்தன.


ஒருகாலை இழந்த நிலையில் தற்போது நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கன்னோர் கோல்டனின் உடல்நிலை தேறிவருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.


அமெரிக்காவின் சுதந்திர தினமான இன்று வாணவேடிக்கை நடத்துவதற்காக யாரோ மறைத்து வைத்திருந்த வெடிப்பொருள் மீது கன்னோர் கோல்டன் கால் வைத்ததால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது.  இருப்பினும் இன்று ஐ.எஸ். தீவிரவாதிகள் அமெரிக்காவின் நகரங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று தெரிவித்திருந்ததால் பூங்கா முழுவதும் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.



Find out more: