நடிகை காஜல் அகர்வால் தற்போது அஜித் நடிக்கும் 57-வது திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இதையடுத்து விக்ரம் உடன் இணைந்து ஒரு புது படத்தில் நடிக்கவுள்ளார். 


தெலுங்குவில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி உடன் இணைந்து, அவர் நடித்து வரும்150-வதாவது திரைப்படத்தில், ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில், அண்மையில் வெளிவந்த 'ஜனதா கேரேஜ்' திரைப்படத்தில், நட்புக்காக  ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டார் காஜல்.

இந்த பாடல், தற்போது பட்டி தொட்டியில் எல்லாம் ஹிட்டாகியுள்ளது. ரசிகர்கள் ஆரவாரத்துடன், இந்த பாடலை ரசித்து வருகிறார்கள். 
இந்நிலையில் சில படதரப்பினர், காஜலை தங்கள் படத்தின், ஐட்டம் சாங்கிற்கு நடனம் ஆட கேட்டுள்ளனர். இது தான் காஜலின் கோபத்தை அதிகரிக்க செய்துள்ளது. 


அவர் 'ஜனதா கேரேஜ்' படத்தில் நட்புக்காக, ஸ்பெஷல் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். ஆனால் இதை சிலர் தவறுதலாக புரிந்து கொண்டு, காஜலை ஐட்டம் டான்சர் என்று கருதி, அவரை தங்கள் படத்திற்கு ஆட வைக்க முயற்சி செய்துள்ளனர். 


அதனால் காஜல் கோபமடைந்து, இனிமேல் நட்புக்காக கூட, இது போன்ற பாடல்களில் நடனமாட்டேன் என்று சொல்லி உள்ளாராம்.


మరింత సమాచారం తెలుసుకోండి: