தனுஷ், சிம்பு படங்களில் நடித்த ரிச்சா கங்கோபத்யாய் அமெரிக்காவில் செட்டிலாக முடிவு செய்துள்ளாராம். டெல்லியில் பிறந்து அமெரிக்காவின் மிஷிகன் மாநிலத்தில் வளர்ந்தவர் ரிச்சா கங்கோபத்யாய். 2007ம் ஆண்டு மிஸ் இந்தியா அமெரிக்கா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வென்று மகுடம் சூட்டினார்.

அங்கு படித்துக் கொண்டிருந்தபோதே திடீர் என்று இந்தியா வந்து படங்களில் நடித்தார்ராணா நடித்த லீடர் தெலுங்கு படம் மூலம் நடிகையானார் ரிச்சா. மேலும் பிரபாஸின் மிர்ச்சி உள்ளிட்ட சில தெலுங்கு படங்களில் நடித்தார். இதற்கிடையே கோலிவுட் பக்கமும் வந்தார்.அதன் பிறகு சிம்புவுக்கு ஜோடியாக ஒஸ்தி படத்தில் நடித்தார்.

படிப்பு தான் மூக்கியம் என்று படங்களுக்கு திடீர் என்று முழுக்கு போட்டுவிட்டு மீண்டும் அமெரிக்கா திரும்பிச் சென்ற ரிச்சா அங்கு வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்து பட்டம் பெற்றுள்ளார்.ரிச்சா தேனில் முக்கிய ஆப்பிள் போன்று இருப்பதாக எல்லாம் கோலிவுட்டில் ஹீரோக்கள் புகழ்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
click and follow Indiaherald WhatsApp channel