பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனை பிடிக்காதவர்கள் யாரும் இல்லை. இவருக்கு உலகளவில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் தற்போது ஹாலிவுட்டில் 'XXX : RETURN OF THE XANDER CAGE ' திரைப்படத்தில் நடிக்கிறார். ஹாலிவுட்டில் இவர் அறிமுகமாகும் முதல் திரைப்படம் இந்த புதிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாலிவுட்டில் தீபிகா படுகோன் பிரபலம் ஆகுவதற்கு முன்பு, சில செயல்கள் செய்துள்ளார். இதை நீங்கள் அறிந்தால் நிச்சியம் அதிர்ச்சி ஆவீர்கள்... உங்கள் பார்வைக்காக இதோ...
1. திரைப்பட துறையில் பணம் சம்பாதிப்பதற்கு முன்பு, தீபிகா படுகோன், மாடல் நடிகர் உபேன் பட்டேல் உடன் பாஷன் ஷோவ்வில் கலந்து கொண்டிருக்கிறார்.

2. தனது பள்ளி பருவத்தில் தீபிகா தேசிய, மற்றும் மாவட்ட அளவில் பாட்மிண்டன் விளையாடி சாம்பியனாக திகழ்ந்துள்ளார்.

3. இதோ பாருங்கள், இவர் க்ளோஸ் அப் டூத் பேஸ்ட் விளம்பரத்தில் நடித்திருக்கிறார்.

4. ஹிமேஷ் ரேஷம்மியா உடன் தீபிகா படுகோன், ஒரு ம்யூசிக் வீடியோவில் நடித்துள்ளார்.

5. தீபிகா படுகோன் கன்னட திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். 'ஐஸ்வர்யா' என்ற கன்னட திரைப்படத்தில், தீபிகா நடித்துள்ளார்.

6. 2005-ம் ஆண்டு, நடைபெற்ற லாக்மி பாஷன் வீக் ஷோவில், தீபிகா படுகோன் ரேம்ப் வாக்கில் நடந்துள்ளார்.

7. புத்துணர்ச்சி தரும் விளம்பரம் ஒன்றில், தீபிகா நடித்திருக்கிறார்.

8. லிரில் சோப் விளம்பரத்திலும்,ஆரம்பத்தில் தீபிகா நடித்திருக்கிறார்.
