'இறைவி' திரைப்படத்திற்கு பிறகு பாபி சிம்ஹா நடிப்பில் அடுத்து 'வல்லவனுக்கு வல்லவன்' திரைப்படம் வெளிவரவுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் தேசிங்கு ராஜா என்பவர் இயக்குகிறார். பாபி சிம்ஹாவின் 'அசால்ட் சேது' தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. 


இதன் படப்பிடிப்பு 'புளிகாட்' ஏரியில் நடைபெற்று வந்தது. இதில், பாபி சிம்ஹா இதுவரை நடித்திராத வகையில், வித்தியாசமாக 11 கெட்டப்களில் நடித்துள்ளாராம். இந்த படத்தின் டீசர் வரும் ஆகஸ்ட் 2-ந்தேதி வெளிவரவுள்ளதாக தற்போது தகவல்கள் வந்துள்ளன. 


மேலும் இப்படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: