1981-ம் ஆண்டு, பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த 'அலைகள் ஓய்வதில்லை' திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை, 35 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அவர் இயக்க முடிவு செய்துள்ளார்.
இதில் ஹீரோவாக இயக்குனர் வசந்தின் மகன் ரித்விக் வருண் நடிக்கவுள்ளார். இவர் 'மூன்று பேர் மூன்று காதல்' திரைப்படத்தில் உள்ள ஒரு பாடலில் நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அலைகள் ஓய்வதில்லை - 2 திரைப்படத்தில் புதுமுக ஹீரோயின் ஒருவர் நடிக்கவுள்ளாராம். இதற்காக பாரதி ராஜா தற்போது ஹீரோயின்களை பரிசீலினை செய்து வருகிறார்.
மேலும்,இதுகுறித்த அதிகார பூர்வ தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.