
நோய்களை பரப்பும் கொசுக்களின் உற்பத்தியை வெகுவாக கட்டுப்படுத்த சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி கொசுக்கள் உற்பத்திக்குக் காரணமானவர்களைத் கடுமையாக தண்டிக்க ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கொசு உருவாகும் வகையில் அசுத்தமான சுற்றுசூழலை வைத்திருந்தால் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என ஆந்திரா முதல்வர் சந்திரபாபு அதிரடியாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஒரு மசோதாவுக்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புது சட்டத்திருத்தத்தின் மூலம் நோய் பரபரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகமால் மக்கள் பயந்தாவது சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பார்கள் என ஆந்திர அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
click and follow Indiaherald WhatsApp channel