மேனன் நடிகை தற்போது நடிக்கும் திரைப்படங்களில் எல்லாம் இரண்டாவது கதாநாயகியாக நடித்து வருகிறார். சில ஹீரோயின்கள், இரண்டாவது நாயகியாக நடிக்க சம்மதிக்கமாட்டார்கள். ஆனால் இவர் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் இரண்டாவது நாயகியாக நடித்து வருகிறார்.


இந்நிலையில் அவர், தனது சம்பளத்தை உயர்த்தியதாக தகவல்கள் வந்துள்ளன. இரண்டாவது ஹீரோயினாக நடிக்கும் நடிகைகளின் பட்டியலில் இவர் தான் நம்பர் ஒன் என்பதால், அவர் தனது சம்பளத்தை ஏற்றியுள்ளாராம். 


லட்சத்தில் சம்பளம் வாங்கியிருந்த இவர் இப்போது கோடிக்கு உயர்த்தியுள்ளாராம். 


சம்பளத்தை உயர்த்திய பிறகு இவரது சினிமா அந்தஸ்த்து உயருமா... இல்லை பிளப்பாகுமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.


మరింత సమాచారం తెలుసుకోండి: