சீனா:
பார்ப்பாரா... பார்க்க வருவாரா... என்று அவர் ஆசைப்பட்டு இருக்கிறார். இதை நிறைவேற்றுவாரா இவர்.


அவர் யார்? இவர் யார்? இருவருமே சூப்பர் ஸ்டார்கள். ஆசைப்பட்டவர் ஆசிய சூப்பர் ஸ்டார்... மற்றொருவர் இந்திய சூப்பர் ஸ்டார். என்ன இன்னும் புரியலையா... ஜாக்கிசான்தான் ஆசைப்பட்டவர். மற்றொருவர் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி.


என்ன விஷயம் என்றால் விரைவில் தமிழில் வெளியாக உள்ள தனது படத்தை நடிகர் ரஜினிகாந்த் முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டும் என்று ஜாக்கிசான் ஆசைப்பட்டுள்ளாராம். 


 உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களை தனது அதிரடி சண்டை மற்றும் நகைச்சுவை காட்சிகள் மூலம் கவர்ந்தவர் ஜாக்கிசான். இவர் சமீபத்தில் நடித்து வெளியான படம்  ‘ஸ்கிப் டிராஸ்’.

Image result for skip trace


 இந்த படம் சீனாவில் கோடிகளை... அதுவும் எத்தனை கோடிகள்... தெரியுங்களா? ஆயிரம் கோடி ரூபாயை அள்ளிக்குவித்தது. ரஜினி நடித்த கபாலி படமும், இந்த படமும் சீனாவில் ஒரு சமயத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது கபாலி படத்தை ஜாக்கிசான் திரையரங்கிற்கு சென்று பார்த்து ரசித்துள்ளார்.


 இப்போ... ஜாக்கிசானின் ஸ்கிப் டிராஸ் படம் தமிழ் பேசுது. எப்படி? ‘இரு கில்லாடிகள்’ என்ற பெயரில் நாளைக்கு (2ம் தேதி) வெளியாகவுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் ஜாக்கிசான்.
 
அவரோட ஆசையை ரஜினிகாந்த் நிறைவேற்றுவாரா? தெரியலையேப்பா...


మరింత సమాచారం తెలుసుకోండి: