சென்னை:
அப்பா செஞ்ச தப்பு என்று கமலின் தப்பை "பாசமாக போட்டு" கொடுத்துள்ளார் ஸ்ருதி.


விஷயம் என்னன்னா? காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு சற்றே சரியான நிலையில் "சபாஷ் நாயுடு" படத்தின் வேலைகளில் மீண்டும் பரபரப்பாக இறங்கிவிட்டார் கமல்ஹாசன்.


இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் கமல்ஹாசன் ஒரு தவறு செய்து இருக்காராம். இதை "போட்டு" கொடுத்துவிட்டார் ஸ்ருதி. என்ன தவறுன்னா... ஒரு காட்சியில் ஸ்ருதியை கமல் பேர் சொல்லி அழைப்பது போன்று படமாக்கி இருக்காங்க...


அப்போது கமல், ஸ்ருதியின் கேரக்டர் பெயரைச் சொல்லி கூப்பிடாமல் ஒரிஜினல் பேரை சொல்லி அழைத்து விட்டாராம். இது மிகவும் செம ஹார்ட் டச்சிங் மொமண்டாக இருந்துச்சுன்னு ஸ்ருதி பாசமும், நெகிழ்ச்சியும் கலந்து சொல்லியிருக்கார். உலக நாயகனாக இருந்தாம் அப்பா... அப்பாதானேம்மா...



మరింత సమాచారం తెలుసుకోండి: