அமெரிக்கா:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆன்டிமுர்ரே, செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் தங்களின் அதிரடி ஆட்டத்தால் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.


கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 2-ம் நிலை வீரரான இங்கிலாந்தின் ஆன்டிமுர்ரே 6-3, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் செக் குடியரசு வீரர் ரோசோலை வீழ்த்தினார். இவரது அதிரடி ஆட்டம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றில் ரஷியாவின் மகரோவாவை 6-3, 6-3 என்ற நேர்செட்டில் அதிரடியாக வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: