இன்றைய காலத்தில், பெரியவர்கள் மட்டுமில்லாது சிறியவர்களும் போதைக்கு அடிமையாகுகின்றனர்.பள்ளியில் படிக்கும் மாணவர்களில் இருந்து, வயதான கிழவர்கள் வரை குடிக்கின்றனர். இதனால் அவர்கள் வாழ்க்கை சின்னா பின்னமாகிறது. 


போதையினால் தான் அழிவதோடு தான் குடும்பமும் சேர்ந்து அழிகிறது. இதிலிருந்து விடுபட சில எளிய டிப்ஸை இன்றைய ஆரோக்கிய தகவலில் நாம் பார்க்கலாம். 


போதையினால் ஏற்படும் தீமைகளை, அதற்கு அடிமையானவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.. பிறகு மனக்காட்டுப்பாட்டுடன், போதையிலிருந்து எப்படியாவது விடுபடுவேன் என்று உறுதி கொள்ள வேண்டும்.


போதை பழக்கம் உடையவரை மீட்கும் முயற்சியில் அவரது குடும்ப உறுப்பினர்களும் அக்கறை காட்டினால் விரைவான முன்னேற்றம் கிடைக்கும். "நீங்கள் இப்போது மாறி இருக்கிறீர்கள். உங்களுக்கு நன்றாக பசியெடுத்து சாப்பிடுகிறீர்கள், நன்றாக உறங்குகிறீர்கள். கோபம் குறைந்திருக்கிறது. குழந்தைகளுடன் பாசத்துடன் பழகுகிறீர்கள். தொடர்ந்து கட்டுப்பாட்டுடன் இருந்தால் புதிய மனிதராக மாறிடுவீர்கள்" என்று ஊக்கப்படுத்துவது நல்ல மாற்றத்தை உருவாக்கும்.


நண்பர், உறவினர்கள் உங்கள் வீட்டிற்குள் போதைப் பொருட்களை கொண்டு வர அனுமதிக்காதீர்கள். அவர்களைக் கண்டித்து வெளியே அனுப்பிவிடுங்கள். இதில் எந்த தவறும் இல்லை. 


மனநல மருத்துவர்களிடம் கவுன்சிலிங் எடுத்துக் கொள்ளலாம். 


மேலும் உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் கொள்ளுங்கள்... மதுவால் ஏற்படும் மற்ற வியாதிகளையும் சிந்தித்து பாருங்கள்.. 


இவற்றை பின்பற்றினாலே போதையிலிருந்து எளிதில் விடுபடலாம்.


మరింత సమాచారం తెలుసుకోండి: