'மூன்று பேர் மூன்று காதல்' திரைப்படத்தின் மூலம் காஸ்டியூம் டிசைனராக சினிமாவிற்கு அறிமுகமான சத்யா. இதுவரை 28 திரைப்படங்களில், காஸ்டியூம் டிசைனராக பணிபுரிந்துள்ளார். இது தவிர நடிகர் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, எமி ஜாக்சன் ஆகியோர்களுக்கு தனிப்பட்ட முறையில் டிசைனராக பணிபுரிந்து வருகிறார். 


மேலும் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு கோட் சூட் தயார் செய்து கொடுப்பதும் இவர் தான். விஜய் நடித்த 'தெறி' மற்றும் தற்போது நடித்து வரும் 'பைரவா' ஆகிய இரண்டு திரைப்படத்திற்கும் காஸ்டியூம் டிசைனராக பணிபுரிந்தது இவர் தான்.


தமிழ் சினிமாவில் முன்னணி காஸ்டியூம் டிசைனர்களுள் ஒருவராக இருக்கும் சத்யா தற்போது திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் தெரிவித்து வருகிறார். அண்மையில் சசிகுமார் நடித்த 'கிடாரி' திரைப்படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்தார். 


இதனை தொடர்ந்து, தற்போது சசிகுமார் நடித்து வரும் புதிய படம் மற்றும் ஜிவி பிரகாஷின் 'அடங்காதே' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். 


சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், 'நல்ல ரோல் கிடைத்தால், தொடர்ந்து நடிப்பேன்' என்று சத்யா கூறினார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: