18 எம்எல்ஏக்களை கட்சிக்கு விரோதமாக பேசியதால் தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் உத்தரவுக்கு தடை விதிக்க ஹைகோர்ட் நேற்று மறுப்பு தெரிவித்துள்ளது. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியிலிருந்து நீக்கி ஆக வேண்டும் என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் மனு ஒன்று கொடுத்தனர். இதைத் தொடர்ந்து 19 எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சட்டசபை தலைவர் தனபாலிடம் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் 19 எம்.எல்.ஏ.க்களும் நேரில் ஆஜராகி தனக்கு விளக்கம் அளிக்க சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.

Image result for 18 mla tamilnadu



8 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டார். 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் அரசிதழிலும் வெளியிடப்பட்டு அவர்கள் வகித்த தொகுதிகள் வெற்றிடமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி நீக்கம் உத்தரவு தங்களுக்கு யாரும் நேரில் தரப்படவில்லை என்றும், பதிலளிக்க அவகாசம் ஏதும் தரப்படவில்லை என்றும், தங்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி எடப்பாடி அரசை காப்பாற்ற சபாநாயகர் முயல்வதாகவும், 18 பேரின் வழக்கறிஞரான துஷ்யந்த் தவே கோர்ட்டில் வாதிட்டார்.

Image result for 18 mla tamilnadu



இதை கேட்டறிந்த நீதிபதி, மறு உத்தரவு வரும்வரை,எந்த வித நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீட்டிப்பு செய்தார். அதேநேரம், 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவில் இப்போது தலையிட்டு அதற்கு தற்சமையம் இடைக்கால தடைவிதிக்க முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார்..

మరింత సమాచారం తెలుసుకోండి: