சென்னை:
சிக்கிடாதீங்கப்பா... சிக்கிடாதீங்க... சிங்கங்களா? என்று கோலிவுட் கோகுல் ஒரு மேட்டரை ரிலீஸ் செய்துள்ளார். அது கொஞ்சம் அதிர்ச்சி ரகம்தான்.


ஏற்கனவே அந்த காலத்தில் இருந்து எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித், தனுஷ்-சிம்பு என்று ரசிகர்கள் பிரிந்து நின்று மோதிக்கிட்டு இருக்காங்க... இப்போ... இந்த லிஸ்டில் இவங்களும் சேர்ந்திடுவாங்களோ என்பதுதான் அந்த அதிர்ச்சி மேட்டர்.


யார் அவங்க...? விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன். இவர்கள் நடித்த றெக்க, ரெமோ படம் ஒரே நேரத்தில் அக்.7ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இதற்கு முன் ஒரே நாளில் வந்த இவர்களின் படங்கள் எதிர் நீச்சல், சூது கவ்வும் இரண்டுமே சூப்பர் ஹிட்.


இப்போது ஒரே நாளில் இவர்களின் படம் ரிலீஸ் ஆனால் கண்டிப்பாக வசூல் பாதிக்கப்படும். ரசிகர்களும் விஜய்-அஜித் போல் பிரிந்து நிற்பார்களே... என்று... கோலிவுட்வாசிகள் அச்சப்படுகின்றனர்.


Find out more: