சென்னை:
எப்படி கூப்பிடுவேன் தெரியுங்களா... தெரிஞ்சுக்கோங்க... என்று ரகசியத்தை உடைத்துள்ளார் நடனப்புயல் பிரபுதேவா.


பிரபு தேவா நடித்துள்ள தேவி படம் வரும் அக்.7ம் தேதி வெளியாகிறது. இதை ஒட்டி பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது.


இதில் பிரபு தேவா, சோனு சூட், தமன்னா மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பிரபுதேவா பேசுகையில், "இந்த படத்தின் மூலம் நான் இயக்குனர் விஜய்யிடம் நிறைய கற்றுக்கொண்டேன். அவரால் எப்படி இவ்வளவு பொறுமையாக எல்லாரிடமும் வேலை வாங்க முடிகிறது என்பதே தெரியவில்லை.


அதனாலே நான் அவரை "மிஸ்டர் பொறுமைசாலி" என்று செல்லமாக அடிக்கடி கூப்பிடுவேன் என்று இயக்குனருக்கு தான் வைத்திருந்த செல்லப்பெயரை போட்டு உடைத்தார். 



మరింత సమాచారం తెలుసుకోండి: