தனுஷ் நடித்துள்ள 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தைப் பற்றிய பத்திரிகையாளர் சந்திப்பு சில நாட்களுக்கு முன்பு தலைநகர் ஐதராபாத்தில் நடைபெற்றது.படத்தின் இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த், தனுஷ், கஜோல் உள்ளிட்டவர்கள் தெலுங்கு பத்திரிகையாளர்களைச் நேர்கோனலில் சந்தித்து படத்தைப் பற்றி பல பேட்டிகளை அளித்தனர். அப்போது தெலுங்கு செய்தித் தொலைக்காட்சி ஒன்றின் பிரபல பெண் நிருபர் தனுஷைப் பேட்டி கண்டார்.

அந்தப் பேட்டியின் போது அவர் விவகாரமான சுசி லீக்ஸ் விவகாரம் மற்றும் தனுஷின் தனப்பட்ட குடும்ப வாழ்க்கை பற்றி தனுஷிடம் கேள்வி கேட்டார். அதனால் கடும் கோபமடைந்த தனுஷ், மைக்கை கழட்டி எறிந்து 'ஸ்டுபிட் இன்டர்வியூ' என்று கோபமாக சொல்லிவிட்டு போய்விட்டார்.இப்போ அதை நினைத்து அன்று எதிர்மறையாக நடந்து கொண்டேன்.

அந்தக் கேள்விக்கு பதிலளிக்க எனக்கு சற்றும் விருப்பமில்லை என்பதில் தெளிவாக இருந்தேன். ஆனால், அவ்வளவு கோபமான எதிர்மறையான செயல் நியாயமற்றது. உண்மையில் கடந்த இரண்டு வாரங்களாக எனது பட வேலைகளால் நான் சரிவர தூங்கவேயில்லை. பேட்டி எடுத்தவரிடம் அடுத்த கேள்வியைக் கேளுங்கள் என மிகச் சாதாரணமாகச் சொல்லியிருக்கலாம்” என தனுஷ் அவருடைய வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.
click and follow Indiaherald WhatsApp channel