விஜய் ரசிகர்கள் ரொம்பவே பெரிதாக எதிர்ப்பார்க்கும் படம் மெர்சல். அதற்கு காரணம் முந்தைய படங்களைவிட இந்தப் படத்தில்தான் நிஜமாகவே விஜய்யின் தோற்றமும் படத்தின் தலைப்பும் செம மெர்சலாக உள்ளன. இன்னொன்று முதல் முறையாக விஜய் இதில் வீர ஜல்லிக்கட்டுக் காளையனாக வேறு வருகிறார். எனவேதான் இந்த பரபரப்பு எதிர்ப்பார்ப்பு.

தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்க, பிரபல அட்லி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படம் இறுதி முடிவுக் கட்டத்தை எட்டிவிட்டது. 'மெர்சல்' படக்குழுவினருக்கு விஜய் தங்க நாணயங்களைப் பரிசாக வழங்கி அனைவரையும் மகிழ்ச்சியி வெள்ளத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.

படக்குழுவுக்கு இது நிச்சயமாக ஒரு இன்ப அதிர்ச்சி. மெர்சல்' படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த மாதம் வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாதம் சிறப்பாக வெளியாகிறது
click and follow Indiaherald WhatsApp channel