குஜராத்:
தேசப்பிதா காந்தியடிகளின் சொந்த மாநிலம். இங்கு அகிம்சையை விட ஹிம்சையே மேல் என்று நினைக்கும் மனிதர்களால் பெரும்காயம் பட்ட சிறுத்தை இறந்த சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது.
இச்சம்பவத்திற்கு வனஉயிரின ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கண்டனம் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். விஷயம் என்னன்னா?
குஜராத்தின் போடாட் மாவட்டத்தில் ராஜ்மஹால் கிராமத்தில் 3 வயது சிறுத்தை ஒன்று உணவு தேடி ஊருக்குள் வந்துவிட்டது. முட்புதர்கள் நிறைந்த பகுதி ஒன்றில் சிறுத்தையை மடக்கி பிடித்த அக்கிராமத்தை சேர்ந்தவர்கள்.
அது மிருகம்தான்... அதற்கு ஐந்து அறிவுதான். பொதுமக்கள் சட்டென்று வனத்துறைக்கு தெரிவிக்காமல் கூர்மையான ஆயுதங்கள் மற்றும் கட்டைகளால் சிறுத்தையை சுற்றி வளைத்து தாக்க, முட்புதரில் சிக்கிய அந்த சிறுத்தையால் ஓட முடியாத நிலை. அடிவாங்கிய அது படுகாயத்துடன் அங்கேயே இறந்ததுதான் பரிதாபம்.
என்னவே இமயமலையில் சென்று கொடியேற்றி மிதப்பில் கிராமத்தினர் செல்ல இப்போ இந்த சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சிறுத்தை அடிக்கடி ஊருக்குள் வந்து கால்நடைகளை அடித்துத் கொன்றுவிடுவதால் அதனை கொன்றதாக எப்போதும் போல் மக்கள் சொல்லிவிட்டு துண்டை உதறி தோளில் போட்டு சென்றுவிட்டனர். ஆனால் வனஉயிரின ஆர்வலர்கள் இதற்கு கண்டனக்குரல் எழுப்ப இப்போது இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.