'பிச்சைக்காரன்' திரைப்படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி 'எமன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், தற்போது இதன் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. 


'நான்' திரைப்பட இயக்குனர் ஜீவா இரண்டாவது முறையாக இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் கைகோர்த்துள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் வரும் டிசம்பர் மாதம் வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது. 


விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடிக்கிறார். மேலும் நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் வில்லனாக நடிக்கிறார். விஜய் ஆண்டனியே இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 


மேலும் கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் ஆண்டனிக்கு இந்த படம் வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு இந்த மாத இரண்டாம் வாரத்தில் தொடங்குகிறது. 


மேலும் இப்படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.



మరింత సమాచారం తెలుసుకోండి: