சைனஸ் பிரச்சனையை சரி செய்ய சில மருத்துவ குறிப்புகள் உள்ளன. அவற்றை இப்போது நாம் பார்க்கலாம். 


1. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, அதில் தும்பை பூக்களை போட்டு காய்ச்சி, வடிகட்டி கொள்ள வேண்டும். பின் அந்த எண்ணெயை, தலைக்கு குளிக்கும் முன்பு பயன்படுத்தி வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், சைனஸால் ஏற்படும் தலைவலி குணமடையும். 


2. தாய் பாலில் சிறிது கிராம்பை போட்டு, அதை பேஸ்ட் பதத்திற்கு அரைத்து, தலையில் பற்று போட்டால் தலைவலி குணமடையும். 


3. கடுகு, சிறிது கஸ்தூரி மஞ்சள் தூள், சிறிது சாம்பிராணி பொடி ஆகியவற்றை தண்ணீரில் கலந்து, படுக்கும் முன்பு தலையில் தடவி, காலையில் கழுவ வேண்டும். 


4. குளிர்பானம் குடிப்பதை அறவே, தவிர்க்க வேண்டும்.


5. குப்பை மேனி, கீழாநெல்லி ஆகிய செடிகளின் சாறை பிழிந்து, அதை நல்லெண்ணையில் கலந்து சூடாக்கி கொள்ள வேண்டும். பிறகு நன்கு ஆறியதும், அந்த எண்ணையை மூக்கில் விட்டால், நாள்பட்ட தலைவலி சரியடையும். 



మరింత సమాచారం తెలుసుకోండి: