சென்னை:
முதல்வர் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என்ற மர்ம தொலைபேசி மிரட்டலால் சென்னையில் பெரும் பதட்டம் உருவானது. போயஸ் தோட்டத்தில் உள்ள முதல்வரின் வீட்டில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.


சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள முதல்வர் வீட்டில் குண்டுவெடிக்கும் என்று ஒரு மர்மநபர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் பேசி மிரட்டல் விடுத்துவிட்டு தொலைபேசி தொடர்பை துண்டித்துவிட்டார். 


இதையடுத்து போலீசார் பரபரப்படைந்தனர். தகவல் சென்னைக்கு பறக்க உடன் போயஸ்தோட்டத்தில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது. இந்நிலையில் முதல்வர் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என்று தொலைபேசியில் பேசிய மர்மநபர் பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Find out more: