புதுடில்லி:
ஜாக்கிரதை... ஜாக்கிரதை... சிறுவர்களை பணிக்கு அமர்த்தினார் இனி சிறைதான் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.


14 வயதிற்குட்பட்ட சிறுவர்களை பணிக்கு அமர்த்தினால் இனி 2 ஆண்டு வரை சிறைதண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம்  மசோதா லோக்சபாவில் நிறைவேறியது.


இதன்படி 14 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமிகளை பணியில் அமர்த்துவோருக்கு இனி 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும்.


14 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்டவர்களை அபாயகரமான பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது. இவ்வாறு அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: