பீஜிங்:
400 குட்டி முதலைகள்... கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இந்த அதிர்ச்சி நடந்தது சீனாவில்.


தெற்கு சீனாவின் குவங்ஸி ஜீவாங் பகுதியில் பக்கத்து நாடான வியட்நாமில் இருந்து கடத்தி வரப்பட்ட ‘சியாமிஸ்’ என்ற அரிய வகையை சேர்ந்த அழகான 400 குட்டி முதலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.


சீனாவின் குவங்ஸி ஜீவாங் மாகாணத்தில் டாங்ஜிங் நகரில் எல்லை பாதுகாப்பு போலீசார் வீடுகளை பதிவு செய்யும் தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு வீட்டில் 3 பேர் பதற்றத்துடன் இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 


அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ள அதில் 2 பேர் டிரக் மூலமாக அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். வீட்டின் பின் வழியாக தப்பிக்க முயன்ற ஒருவர் பிடிபட்டார். பின்னர் போலீசார் அந்த வீட்டை சோதனை செய்ததில் சியாமஸ் வகையை சேர்ந்த அழகான 400 குட்டி முதலைகள் பிடிபட்டன.


இந்த குட்டி முதலைகள் வியாபாரத்திற்காக பக்கத்து நாடான வியட்நாமில் இருந்து கடத்தி வரப்பட்டவை என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவை அரிய வகை முதலைகள்  என்பதால் சீனாவில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Find out more: