சென்னை:
தல ரசிகர்களுக்கான ஸ்பெஷல் நியூஸ்ங்க இது. எப்போ... எப்போ...ன்னு காத்திக்கிட்டு கிடந்தவங்களுக்கு இப்போ... இப்போ என்று அதிரடியாக 2 நாளைக்கு முன்னாடி தல படத்தின் புது படத்துக்கு போட்டாங்க பூஜை. அது பழைய செய்தி... புது செய்தி என்ன தெரியுங்களா?


வீரம், வேதாளம்னு கொடுத்த ஹிட்டை விட இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகணும்னு கதையை செமத்தியாக செதுக்கி இருக்காராம் டைரக்டர். பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில்தான் நடக்குதாம். சர்வதேச ஸ்பை திரில்லர் படமாக இது வரணும்னு ரொம்பவே மெனக்கெட்டுக்கிட்டு இருக்காராம். 


அழகுன்னா அது "தல"தான் சொல்லிடுவாங்க. இந்த படத்துல இன்னும் செம ஸ்டைலிசா காட்ட இருக்காங்களாம். ஹாலிவுட் மேக்கப்மேன்கள், இம்மாத இறுதியில் பல்கேரியாவில் படப்பிடிப்பு தொடக்கம், ஆக்சன் காட்சிகள் இருப்பதால் அனுஷ்கா ஒப்பந்தம் என்று இந்த படத்தோட செய்திகள் இப்பவே ரவுண்டு கட்ட ஆரம்பிச்சுடுச்சு.


கபாலி பீவர் முடிஞ்ச பிறகு "தல" பீவர் ஆரம்பிக்கும் என்று தெரியுது. இதை விட முக்கியமான விஷயம்... இந்த படத்திற்காக அனிருத் இப்பவே பாடல்களை கம்போஸ் செய்ய ஆரம்பிச்சுட்டாராம்... ஆரம்பிச்சுட்டாராம்...


మరింత సమాచారం తెలుసుకోండి: