உலகின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர்,பினிஷர், இந்தியாவுக்காக உலகக்கோப்பை பெற்று தந்தவர் என பல பெருமை கொண்டவர் தோனி.37 வயதிலும் விளையாடி வரும் தோனி தற்போது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரிலும் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் தோனி ஓய்வு பெறவுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகக்கோப்பையில் இந்திய அணி கடைசி போட்டியுடன் தோனி ஓய்வு பெறுவார் என பிடிஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தோனியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் மூத்த வீரர்கள் ஓய்வு பெற்றுத்தான் ஆகவேண்டும். தோனியின் ஓய்வு குறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வரவில்லை.ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்காக தோனி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
click and follow Indiaherald WhatsApp channel