நீட் தேர்வுக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளி ஆசிரியை தனது  முக்கிய பணியை ராஜினாமா செய்தார்.கஷ்டமான நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள், ஏழை மாணவர்களின் மருத்துவராகும் கனவு கலைந்துவிடும் நிலை உள்ளது. இதற்கு அனிதா என்ற அரியலூரை சேர்ந்த மாணவி மனவேதனையில் தற்கொலை செய்து கொண்டார்.




இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் வைராபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அரசு பள்ளி ஆசிரியை சபரிமாலா தனது மகனுடன் நேற்று நீட் தேர்வுக்கு எதிராக அவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அந்த போராட்டத்துக்கு அவருக்கு அரசு அனுமதி மறுக்கப்பட்டது.


Image result for neet protest by government teacher

இதனால் தனது ஆசிரியை பணியை நல்ல காரணத்துக்காக சபரிமாலா ராஜினாமா செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த காலத்தில் உதவியாளர் வேலை கிடைத்தாலும் அரசு வேலை தான் கிடைக்க வேண்டும் என்று முதுநிலை பட்டதாரிகள் போராடி வரும் வேளையில் யாருக்கும் கிடைக்காத அரிதான ஆசிரியை பணியை நீட் தேர்வுக்காக ராஜினாமா செய்ததில் இருந்து வருங்கால இந்தியா மீதும் மாணவர்கள் மீதும் அவர் வைத்துள்ள மெய்யான அக்கறை புலப்படுகிறது.

ச்

మరింత సమాచారం తెలుసుకోండి: