அனிருத் அதிரடி இசையில் உருவான 3, எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, காக்கி சட்டை, கத்தி, வேதாளம், ரெமோ எனபற் பல படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. அனிருத், தற்போது அஜித்தின் விவேகம், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் ஆகிய படங்களுக்கு இசையமைத்திருப்பவர், அடுத்தபடியாக விஜய்யின் 62வது படத்திற்கும் இசையமைக்க அவர்தான் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், அஜித்தின் விவேகம் படத்தில் இடம்பெற்ற சர்வைவா, தலை விடுதலை ஆகிய இரண்டு பாடல்களும் ஏற்கனவே வெளியாகி கலக்கி சூப்பர் ஹிட்டாகி விட்டன. நேற்று மூன்றாவதாக காதலாட பாடலும் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த அனிருத் பாடலை கர்நாடக இசையில் மெலோடி பாடலாக உருவாக்கியிருக்கிறார்.

இதையடுத்து விவேகம் படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னமும் அதிகரித்திருக்கிறது. அதோடு, இந்த மூன்று பாடல்களுமே ரசிகர்களிடம் கடும் வரவேற்பு பெற்றதை அடுத்து, அனிருத்தை தொடர்பு கொண்டுவெகுவாக பாராட்டியிருக்கிறார் அஜித். அதைக்கேட்ட அனிருத், இன்ப அதிர்ச்சியில் அழ்ந்து உள்ளார்.
click and follow Indiaherald WhatsApp channel