சிலருக்கு உடலில் ஆங்காங்கே தேமல் இருக்கும். இது பார்ப்பதற்கு அசிங்கமாக இருப்பதோடு, தாழ்வு மனப்பான்மையையும் உருவாக்கும்.

இங்கு சில பாட்டி வைத்திய குறிப்புகள் உள்ளன. இதை நீங்கள் பின்பற்றினால், தேமல் எளிதில், மறைந்து விடும். 


1. நாட்டு மருந்து கடைகளில், கார்போக அரிசி கிடைக்கும். இதை இடித்து, பொடி செய்து, மெல்லிய துணியில் சலித்து, கண்ணாடி டப்பாவில் எடுத்து வைத்து கொள்ளுங்கள். 


அதன் பிறகு, தினமும் இதில் கொஞ்சம் எடுத்து, தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்தில் கலக்கி, தேமல் இருக்கும் இடங்களில் தடவி, 20 நிமிடம் கழித்து தண்ணீரால் கழுவி கொள்ளுங்கள். 


இவ்வாறு செய்து வந்தால், தேமல் விரைவில் மறைந்துவிடும். 


2. காய்ச்சிய நல்லெண்ணையில், மஞ்சள் சேர்த்து, தேமல் இருக்கும் பகுதிகளில் தடவி வந்தால், தேமல் நீங்கும்.


మరింత సమాచారం తెలుసుకోండి: