சென்னை:
ரெமோ டிரைலரை தெறிக்க விட்டு அடுத்த லெவலுக்கு எடுத்து சென்றுவிட்டனர் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் என்று கோலிவுட் ஆச்சரியத்தில் வாயை பிளந்துள்ளது. 


சின்னத்திரையில் இருந்து இருந்து இடம்மாறி வெள்ளித்திரையில் பெரிய இடத்தை பிடித்துள்ள சிவகார்த்திகேயனை அனைத்து தரப்பினரும் ரசிக்கின்றனர். 


இவரின் நடிப்பில் வந்த ரஜினிமுருகன் கல்லா கட்டிய கட்டை பார்த்து கோலிவுட்டே அதிர்ந்துதான் போய்விட்டது என்று கூற வேண்டும். இப்போது இவரது நடிப்பில் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் படம் ரெமோ.


இப்படத்தின் டிரைலர் ரொம்ப பெரிய எதிர்பார்ப்புக்கு இடையில் நேற்று வெளியானது. இந்த டிரைலர் ரசிகர்களிடம் செம வரவேற்பு பெற்றுள்ளது. வெளியான 12 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களையும், 36K லைக்ஸையும் பெற்றுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்க... இதனால் சிவகார்த்திகேயன் அடுத்த லெவல்... அதற்கும் அடுத்த லெவல் என்று முன்னேறி வருகிறார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: