ஆன்லைனில் உணவு சப்ளை செய்யும் நிறுவனங்களில் ஒன்று ஜொமைட்டோ. இந்நிறுவனத்தில் ஆர்டர் செய்த ஒருவர் தன் உணவை இந்து அல்லாதவர் டெலிவரி செய்தால், உணவை கேன்சல் செய்துவிடுவதாக கூற ஜொமைட்டோ பதிலடி கொடுத்தது.அமித் சுக்லா என்பவர் ஜொமைட்டோவில் உணவு ஆர்டர் செய்திருந்தார்.

அவருக்கு டெலிவரி செய்யும் நபர் குறித்த விபரங்களை ஜொமைட்டோ அனுப்ப அவர் கஸ்டமர் கேர் எண்ணை தொடர்பு கொண்டு இந்து அல்லாதவர் டெலிவரி செய்தால் ஆர்டரை ரத்து செய்துவிடுவதாக கூறியுள்ளார்.
இதற்கு பதில் அளித்த ஜொமைட்டோ, டெலிவரி செய்பவரை மாற்ற முடியாது, ஆர்டரை ரத்து செய்தால் பணமும் திருப்பி தரப்படாது. உணவுக்கு மதம் இல்லை,உணவே மதம் தான் என்றும் ஜொமைட்டோ கூறியுள்ளது. ஜொமைட்டோவின் பதிலுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
click and follow Indiaherald WhatsApp channel