
இது காங்கிரஸ் கட்சியை கோபத்திலும் அதிருப்தியிலும் ஆழ்த்தியது.உத்தர பிரதேச பிரச்சாரத்தில் பேசிய மோடி, ராஜீவ் காந்தி மிஸ்டர் கிளீன் என்றார்கள் ஆனால் அவரது வாழ்க்கை ஒரு ஊழல்வாதியாகவே முடிந்தது என்று கூறினார்.போபர்ஸ் வழக்கில் ராஜீவ் காந்தி மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் மோடி பேசியது தவறான குற்றச்சாட்டு என்று கூறி அவரது பேச்சுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டு இருந்தது.
இது தேர்தல் ஆணையத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக வைக்கப்பட்ட ஒன்பதாவது புகாராகும். இதுவரை வாய்த்த எட்டு புகார்களில் மோடி மீது தவறு கிடையாது என்று தீர்ப்பு கூறப்பட்டதை போலவே இந்த புகாருக்கும் ராஜீவ் காந்திக்கு எதிராக பேசியதில் எந்த தேர்தல் விதிமுறை மீறலும் இல்லை, அது தேர்தல் விதிகளுக்கு புறம்பானது கிடையாது, அதனால் இந்த புகாரை தள்ளுபடி செய்வதாக தேர்தல் ஆணையம் மோடி ஆதரவு ஆணையராக செயல்பட்டு கூறியுள்ளது.
click and follow Indiaherald WhatsApp channel