சென்னை:
எங்க போச்சு தெரியுங்களா? எது தெரியுங்களா? நல்ல மனசுப்பா அவருக்கு என்று புகழ்கிறார்கள். யாரை தெரியுமா?


கேள்விகளாக வந்தா என்னப்பா பதில்னு கேட்கிறீங்களா? இதுக்கும் கேள்வியா... இருங்க.. இருங்க ஒவ்வொன்றா சொல்றோம் கேட்டுக்கோங்க.


சூர்யா நடிப்பில் வெளியான '24' திரைப்படத்துல அவரோடயே வந்த அந்த வீல்சேர் ஞாபகம் வருதா... வில்லன் சூர்யா உட்கார்ந்து அதகளம் செய்யும அதேசேர்தான். பெரும் தொகை கொடுத்து இந்த படத்திற்காக வாங்கப்பட்ட இந்த வீல்சேரை இப்போ தி ஸ்பைனல் பவுண்டேசன் என்ற அமைப்புக்கு இலவசமாக கொடுத்து இருக்காராம் சூர்யா... சூப்பர்ப்பா... 


 இந்த வீல்சேர் சண்டிகார் மாநிலத்தில் 10ம் தேதி தொடங்கும் இந்த அமைப்போட புதிய கிளைக்கு கொடுக்கறாங்களாம். அங்குள்ள மாற்றுத்திறனாளிக்கு இந்த வீல் கொடுக்க வழங்கப்படும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.  இந்த விஷயம் தற்போது கோலிவுட்டில்
செம டாக் மச்சி...


మరింత సమాచారం తెలుసుకోండి: