ஐதராபாத்:
அவரே மறந்தாலும்... ரசிகர்கள் மறக்காம அந்த நாளை நினைவில் வைச்சு கொண்டாடி தீர்த்து இருக்காங்க... எதற்கு தெரியுங்களா?


5 வருடங்களுக்கு முன்பு ஆந்திராக்காரர்கள் மத்தியில் மட்டுமே பாப்புலராக இருந்தவர்...  தன்னோட அடுத்தடுத்த படங்கள் வாயிலாக உலகத்தின் பார்வையை தன் பக்கம் திரும்ப வைத்தார். அவர்... ராஜமவுலிதான். மஹதீரா, பாகுபலியின் அபார வெற்றியால் இவர் பெயர் கம்பீரமாக ஒலிக்கிறது.


தெலுங்கு சினிமா என்றாலே கிண்டல் செய்து வந்தவர்களை வாயடைத்து எஸ்கேப் ஆக வைத்தது பாகுபலி. இந்த படம் வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. இதை படக்குழுவினர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இப்போது எல்லாரும் எதிர்பார்ப்பது பாகுபலி-2 எப்போது? இந்த கேள்வியை விட கட்டப்பா ஏன் அப்படி செய்தார். அவர் பாகுபலியை கொலை செய்ய என்ன காரணம் என்பதுதான். சீக்கிரம் வாங்கப்பா... கட்டப்பா....!


Find out more: