இயக்குனர் பாரதிராஜா, அண்மையில் 'குற்றபரம்பரை' திரைப்படத்தை தான் இயக்கப் போவதாக அதிகார பூர்வமாக அறிவித்து, இந்த படத்தின் பூஜை விழாவில் கலந்துக் கொண்டார். 


ஆனால் அதன் பிறகு இந்த படம் குறித்து, எந்த தகவலும் வெளிவரவில்லை. இந்நிலையில் பாரதிராஜா, 'குற்றப்பரம்பரை' திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பு ஒரு காதல் திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும், இந்தபடத்தை முடித்த பிறகு அவர் குற்றப்பரம்பரை திரைப்படத்தை தொடங்குவார் எனவும் தகவல்கள் வந்துள்ளன.


மேலும் அவர் இயக்கவுள்ள காதல் திரைப்படத்தில், இயக்குனர் வசந்தின் மகனும், நடிகர் சீயான் விக்ரமின் மகன் துருவும் அறிமுக ஹீரோக்களாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.



Find out more: