இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆரம்பத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆன புதிதில் திரிஷா இல்லனா நயன்தாரா டார்லிங் என ஹிட் படங்களில் நடித்தார்.



ஆனால் அடுத்தடுத்த படங்களான செம கடவுள் இருக்கான் குமாரு நாச்சியார் படங்கள் தோல்வியை அடைந்தன. இந்நிலையில் அடுத்ததாக ஜிவி பிரகாஷ் ஒரு காதல் படத்தில் நடித்து வெளியாக உள்ளது.



அறிமுக இயக்குனர் சந்திரமௌலி இயக்கத்தில் வெளியாக உள்ள ஹண்ட்ரட் பெர்சன்ட் காதல் தான் அது. இந்த படத்தில் ஜிவி ஜோடியாக ஷாலினி பாண்டே நடிக்க காதலர் தினத்தன்று திரைக்கு வரவுள்ளது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: