நடிகர் விஜய் தற்போது தனது 60-வதாவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை கோயம்பேட்டில் நடைபெற்று வந்தது என்பதை நாம் பார்த்தோம். 


இதையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடைபெறவுள்ளது. இதில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும் பெயரிடப்படாத நிலையிலே, இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 


இந்நிலையில், இந்த படத்தில் நடிக்கும் மலையாள நடிகை அபர்ணா வினோத், தனது சமூக வலைதள பக்கத்தில், விஜய் 60 திரைப்படத்தின் தலைப்பை தற்போது படக்குழுவினர் பரிசீலினை செய்து வருகின்றனர். பழம்பெரும் நடிகர் எம்.ஜி.ஆர் நடித்த 'எங்கள் வீட்டு பிள்ளை' திரைப்படத்தின் தலைப்பு, இந்த படத்தின் தலைப்பாக இருக்க வாய்ப்பு உள்ளது' என்று டிவிட் செய்துள்ளார்.  

அபர்ணா வினோத்


எனினும் இதுகுறித்த அதிகார பூர்வத்த தகவல்கள் வெளிவரும் வரை நாம் காத்திருக்க வேண்டியுள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: