சென்னை:
இந்தியாவில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமை நம்ப "கபாலி" படத்தால் ரஜினிக்கு கிடைத்துள்ளது. எப்படி தெரியுங்களா?
வாங்க பார்ப்போம்... ரஜினி நடித்த கபாலி படம் ஒரு வாரத்தில் கல்லா கட்டிய அமௌண்ட் ரூ. 250 கோடி என்பது எல்லாருக்கும் தெரிந்தது. இன்னும் இந்த வசூல் தொடரும்... தொடரும் என்று தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இதனால் இந்த வசூல் சாதனை இன்னும் பல மடங்கு உயரும் என்று தெரிகிறது.
இந்த படத்திற்காக ரஜினிக்கு பேசப்பட்ட சம்பளம் ஆரம்பத்தில் 35 கோடி ரூபாய் என்றும், இப்போ படத்தின் லாபத்தில் 45 கோடி ரூபாய் அளவிற்கு பங்கு வாங்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. அப்படி என்றால் மொத்தம் ரூ.80 கோடி சம்பளம் ஆகிவிட்டது. இதனால் இந்தியாவின் அதிகபட்ச சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமை சூப்பர் ஸ்டாருக்கு கிடைத்துள்ளது. சபாஷ்... சபாஷ்...