சென்னை:
பன்முகம் கொண்ட பஞ்சு அருணாச்சலம் மறைவு தமிழ் படஉலகத்திற்கே பெரும் இழப்பாக உள்ளது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி தன் வருத்தத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் என்று பல முகம் கொண்ட பஞ்ச அருணாச்சலம் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரஜினி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பஞ்சு அருணாச்சலம் அவர்களின் மறைவுக்கு தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருக்கிறார். எப்படி தெரியுங்களா? (இதை ரஜினி வாய்சில் கற்பனை செய்து படியுங்கள்) Panju sir ... I will really really miss you. May your soul rest in peace என்று பதிவிட்டுள்ளார். இது இருவருக்குள்ளான ஆத்ம நட்பை வெளிப்படுத்துகிறது.
இவர் இப்படி சொல்ல காமெடி நடிகர் விவேக், பஞ்சு அருணாச்சலம் பற்றி நெகிழ்ச்சியாக ஒரு பதிவிட்டுள்ளார். அரசு வேலையை விட்டுவிடு, உனக்கு சினிமாவில் பெரிய எதிர்காலம் உள்ளது என்று ஆரம்பத்திலேயே எனக்கு நம்பிக்கை ஊட்டியவர் இவர்தான் என்று தெரிவித்துள்ளார்.