சென்னை:
தாணு... தாணு... பார்வை இப்போ சூர்யா... பக்கம் திரும்பி இருக்காம் என்று கோலிவுட் உளவாளி உலகநாதன் மேட்டரை சொல்லியிருக்காங்க...


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 2.0 படத்தில் நடித்து வருகிறார். விஜய் பைரவா படத்தில் நடிக்க, இதற்கு முன் இருவருமே கலைப்புலி தாணு தயாரிப்பில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இப்போ இவர்களை வைத்து அடுத்த படம் செய்ய முடியுமா? முடியாதே... அதனால் தாணுவின் பார்வை சூர்யா பக்கம் திரும்பி உள்ளது.
ஏற்கனவே சூர்யா நடித்த சூப்பர் ஹிட் படமான காக்க காக்க படத்தை தயாரித்தவர் தாணுதான். படத்தை இயக்கியவர் கௌதம் மேனன்.


அதனால் இந்த கூட்டணியை வைத்து காக்க காக்க பார்ட்-2 எடுக்க முயற்சி நடக்குதாம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று சொல்றாங்க...


మరింత సమాచారం తెలుసుకోండి: