நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மோகன் ராஜா இயக்கும் புது படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது. 


இந்நிலையில் இந்த படத்தில், முக்கிய ரோலில் நடிக்க நடிகை சினேகா ஒப்பந்தமாகியுள்ளார்.பிரசன்னாவை திருமணம் செய்த பிறகு, கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்த ஸ்னேகா, விஹான் பிறந்த பிறகு நடிப்பதிலிருந்து ஒதுங்கினார்.


இந்நிலையில் தற்போது மீண்டும் நடிக்க முடிவு எடுத்துள்ளார். ரீ என்ட்ரி கொடுக்கும் சிநேகாவிற்கு, இந்த படம் நல்ல எதிர்காலத்தை அளிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.



మరింత సమాచారం తెలుసుకోండి: