சூர்யா, சிம்பு, அஜித் போன்ற நடிகர்களுக்கு தேக்கநிலை ஏற்பட்டபோது பிரேக் கொடுத்தவை கௌதம் மேனன் இயக்கிய படங்கள் தான். அந்த வகையில் 'மாரி', 'தங்கமகன்' படங்களால் கிடைத்த ஏமாற்றத்தை ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ தீர்த்து வைக்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறார் தனுஷ்.


கௌதம் மேனன் படங்கள் வழக்கமாக போலீஸ் படங்களாகத் தான் இருக்கும். ஆனால் இந்த படத்தின் கதை பற்றி ஒரு செய்தி கூட இன்னும் வெளிவரவில்லை.


மேகா ஆகாஷ் என்ற நடிகை இந்த படத்துக்காக தனுஷுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இதுதவிர 'தொடரி', 'கொடி', 'சூதாடி', 'வட சென்னை' ஆகிய படங்களும், செல்வராகவன் இயக்கும் பெயர் வைக்கப்படாத ஒரு படமும் தனுஷின் கைவசம் உள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: