ரஜினிகாந்த் நடித்து வெளி வர இருக்கும் 2.ஓ படத்தின் இசை வெளியீடு, டீசர் மற்றும் ட்ரைலர் ரிலீஸ் குறித்து இன்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். லைகா நிர்வாகி ராஜு மகாலிங்கம்.

ஸுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள படம் 2.ஓ. லைகா நிறுவனம் மொத்தம் ரூ 400 கோடிக்கும் மேல் செலவழித்து பிரமாண்டக உருவாக்கி வரும் இந்தியாவின் காஸ்ட்லி படம் இது பிரபல ஷங்கர் இயக்கி வருகிறார்.இந்தப் படத்தின் பெரும்பகுதி காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டுவிட்டன. ஒரே ஒரு டூயட் பாடல் காட்சி மட்டும் இம்மாதம் கடைசியில் படமாக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் படத்தின் பிரமாண்டமான இசை வெளியீடு, டீசர் மற்றும் ட்ரைலர் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார் லைகா நிர்வாகி ராஜு மகாலிங்கம் படத்தின் முதல் கலக்கும் டீசரை வரும் நவம்பர் மாதம் வெளியிடவிருக்கின்றனர். ஹைதராபாத் நகரில் கோலாகலமாக இந்த வெளியீட்டு விழா நடக்கிறது
click and follow Indiaherald WhatsApp channel