உத்தர பிரதேசத்தில் அவர் சமீபத்தில் செய்த பிரச்சாரத்தில் பாஜக கூட்டணியை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். இதில் பேசுகையில் காங்கிரஸ் கட்சி என்னை களங்கப்படுத்த பார்க்கிறது. பாஜக ஆட்சி மீது பொய்யான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.
ரபேல் வழக்கிலும் அதேபோலத்தான் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். ராகுல் காந்தி சொல்லும் புகார்களை அவரால் நிரூபிக்க முடியாது, இது அவருக்கே பெரிய சிக்கல் ஏற்படுத்தும். நான் ஏழை தாயின் மகன், அவர் போல பணக்காரன் இல்லை.
உங்கள் தந்தையாகிய ராஜீவ் காந்தியை மிகவும் உத்தமர், நல்லவர் என்றும் மிஸ்டர் க்ளீன் என்ற ரீதியிலும் காங்கிரஸ் சித்தரித்து வருகிறது. ஆனால் உண்மையில் அவர் தான் மிக பெரிய, நம்பர் ஒன் ஊழல்வாதி, அவரது வாழ்க்கையே ஊஅழல்வாதியாகவே முடிந்தது என்று ராஜீவின் மரணத்தையும் கேவலமாக பேசி சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளனர் மோடி.
click and follow Indiaherald WhatsApp channel