முன்னொரு காலத்தில் தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தமன்னா. அஜீத், மகேஷ் பாபு, சூர்யா, ராமச்சரன் என்று ஜோடி போட்டு வந்த தமன்னா, இன்றோ சந்தீப் கிஷன், நந்தமூரி கல்யாண்ராம் என சிறு சிறு நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து காலத்தை ஓட்டி வருகிறார்.


Image result for tamanna apherald


 இந்நிலையில் சமீப காலமாக எவ்வளவு கவர்ச்சியாக வேண்டுமானாலும் நடிக்க ரெடி  என்ற ரீதியில் நடித்து வருகிறார். சென்ற ஆண்டு, அன்பானவன் அசாராதவன் அடங்காதவன் படத்திலேயே சிம்புவோடு படு கவர்ச்சியாக, செக்சியான உடைகளில் நடனம் ஆடி ரசிகர்களை சூடேற்றிய தமன்னா, சில ஆண்டுகளாகவே பல படங்களில் ஒரு பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்டு வருகிறார்.


Image result for tamanna apherald


 அல்லுடு சீனு படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியவர், அதனை தொடர்ந்து ஸ்பீடுனோடு படத்திலும் கவர்ச்சியான ஐட்டம் சாங்கில் ஆடினார். ஜாகுவார் கன்னட படத்தில் சம்பங்கி என்ற பாடலிலும், சென்ற ஆண்டு ஜெய் லவ குசா படத்தில் ஸ்விங் சாரா பாடலிலும் முரட்டு குத்தாட்டம் ஆடிய தமன்னா, அடுத்ததாக நாக சைதன்யா நடிக்கும் சவ்யசாசி படத்திலும், ஒரு பாடலுக்கு படு கவர்ச்சியாக குத்தாட்டம் போடவுள்ளார். மார்க்கெட் போய்விட்டதால் கிடக்கிற கவர்ச்சி பாடல்களில் எல்லாம் ஆடி சம்பாதிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. 


Find out more: