சென்னை:
ரூ.300 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல்... பறிமுதல் என்று அதிகாரிகள் சொல்லியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீடு மற்றும் அலுவலகங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 300 கோடி ரூபாய் அளவுக்கு, கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

Image result for நத்தம் விஸ்வநாதன் வீடு மற்றும் அலுவலகங்களில்

கடந்த சட்டசபை தேர்தலின் போது, கரூரில் உள்ள பைனான்சியர் அன்புநாதன் வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது அனைவரும் அறிந்தது. இதில் 4.70 கோடி ரூபாய் சிக்கியது. இதையடுத்து வருமான வரித்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அன்புநாதனுக்கும், நத்தம் விஸ்வநாதன், அவரது மகன் அமர்நாத் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. 


பின்னர் இந்த தொடர்பு பல பெரும் புள்ளிகளை இணைத்தது என்பதுதான் அடுத்ததாக தெரிய வந்த அதிர்ச்சி தகவல். சென்னை மேயர் சைதை துரைசாமி, அவரது மகன் வெற்றி ஆகியோர் வரை இந்த தொடர்பு வட்டம் நீள வருமான வரித்துறையினர் அதிடியாக ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் குதித்தனர்.


ஆதாரங்கள் சிக்க... அவை உறுதி செய்யப்பட்டதும் கடந்த 12ம் தேதி திண்டுக்கல் மாவட்டம், வேம்பார்பட்டியில் உள்ள நத்தம் விஸ்வநாதன் வீடு, சென்னையில் உள்ள அவரது வீடு, நண்பர்களின் வீடுகள் மற்றும் சைதை துரைசாமியின் ராஜகீழ்ப்பாக்கம் பண்ணை வீடு, சென்னை வீடு என்று 8 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.


ஐந்து நாட்களாக நடந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் என்ன சொல்லியிருக்காங்க தெரியுங்களா? 


சோதனை இன்னும் தொடர்கிறது; எனினும், இதுவரை கிடைத்தவற்றை மதிப்பிட்டுள்ளோம். கணக்கில் வராத பணம் எதுவும் சிக்கவில்லை. ஆனால், சென்னையில் உள்ள நத்தம் விஸ்வநாதன் கூட்டாளி வீட்டில், 25 லட்சம் ரூபாய் சிக்கியது. மேலும், நத்தம் விஸ்வநாதன் ஏராளமான இடங்களில் முதலீடு செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.


அது தொடர்பாக, 300 கோடி ரூபாய் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளனர்.



మరింత సమాచారం తెలుసుకోండి: