புதுடில்லி:
வந்துட்டாருங்க... 5 நாள் சுற்றுப்பயணத்தை முடிச்சுக்கிட்டு நம்ம பிரதமர் இந்தியாவிற்கு திரும்பி வந்துட்டாருங்க.


பிரதமர் மோடி மொசாம்பிக், தென்னாப்பிரிக்கா, டான்சானியா, கென்யா ஆகிய 4 ஆப்ரிக்க நாடுகளுக்கு 5 நாள் அரசு முறை சுற்றுப் பயணம் போனார். இப்போ திரும்பி வந்துட்டார்.


மொசாம்பிக்கில் இருநாடுகளுக்கிடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்காம். இதேபோல்  
தென்னாப்பிரிக்காவில்த கவல் தொழில்நுட்பம், கலை, கலாசாரம், சுற்றுலா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிடுச்சாம்.


டான்சானியாவில் என்ன ஒப்பந்தம் என்று கேட்கிறீர்களா? பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புக்கான உடன்பாடுகளாம். இதேபோல் கென்யாவிற்கும் சென்ற பிரதமர் மோடி இந்த சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நைரோபி விமான நிலையத்திலிருந்து நேற்று டில்லிக்கு புறப்பட்டு இன்று காலையில் வந்து சேர்ந்து விட்டார்.


அடுத்த பயணம் எப்போன்னு இப்பவே கேட்கக்கூடாதுங்க...


Find out more: